திருமணம் முடிந்து கணவனுடன் வெளிநாட்டிற்கு சென்ற மகள்: அதன் பின் புகைப்படத்தை பார்த்து தாய்க்கு தெரிந்த உண்மை

திருமணமாகி கணவனுடன் வெளிநாட்டிற்கு சென்ற கேரள பெண், ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பில் சரணடைந்தவர்களின் குழுவில் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அச்சுறுத்தல் காரணமாக ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்கள் சரணடைந்தனர்.

இதில் சரணடைந்த 22 பேரில் 10 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.

இதனால் அவர்களை அடையாளம் காண National Investigation Agency விசாரணையை துவங்கியது. ஆனால் சரணடைந்தவர்கள் குறித்த விபரங்களை NIA வெளியிடவில்லை.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் சரணடைந்த ஐ.எஸ் அமைப்பின் குழுவில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா என்ற பெண்ணும் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதை அந்த பெண்ணின் தாய் பிந்து உறுதி செய்துள்ளார். அவர் NIA அதிகாரிகள் காட்டிய புகைப்படத்தின் குழுவில் அவர் இருந்ததாக அடையாளம் காட்டியுள்ளார்.

இது குறித்து, பிந்து கூறுகையில், NIA சார்பில் சில புகைப்படங்கள் காட்டப்பட்டன. அதில் என் மகள், மருமகன் ஆகியோர் இருப்பதை கண்டேன்.

அவர்களிடம் அடையாளம் காட்டினேன். என் மருமகனின் தாயும் அந்தப் புகைப்படத்தில் இருப்பதை உறுதி செய்தேன்.

குறித்த புகைப்படத்தில் புர்கா அணிந்த பெண்ணின் மடியில் என் பேரனும் பேத்தியும் இருப்பதைக் கண்டேன். அது என் மகள் நிமிஷா பாத்திமா தான், 2017-ஆம் ஆண்டு வெளிநாட்டுக்குச் சென்றவள், 2018 ஜூன் முதல் நவம்பர் வரை குறுந்தகவல் மற்றும் பேரக்குழந்தைகளின், புகைப்படம் ஆகியவற்றை அனுப்பிவைத்தாள்.

ஆனால் நவம்பர் 26-ஆம் திகதிக்கு பிறகு எந்த ஒரு குறுந்தகவலும் வரவில்லை. அதன்பிறகு நடந்த பிரச்னைகளில் பலர் இறந்ததாகத் தகவல் வந்தது.

ஆனால், என் மருமகன் உள்ளிட்டோரின் டெலிகிராம் ஆப் லைவில் இருந்ததால் அவர்களுக்கு ஆபத்தில்லை என்பதை உணர்ந்தேன்.

அன்று முதல் இன்றுவரை NIA எங்களுக்கு உறுதுணையாக உள்ளது. என் மகள் உயிரோடு இருப்பதாகத் தகவல் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ஒருபக்கம் நடக்கட்டும் என்று கூறியுள்ளார்.