வீட்டைவிட்டு வெளியேறி 20 ஆண்டுகள் மாயமாகி இளைஞர்… மனைவியின் அந்த கேள்வி: பெற்றோருக்கு இளைஞர் அளித்த இன்ப அதிர்ச்சி

இந்திய மாநிலம் கேரளாவில் இளைஞர் ஒருவர் மாயமாகி நீண்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் வீடு திரும்பியுள்ள சம்பவம் பெற்றோரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் நீண்ட 20 ஆண்டுகளாக கண்ணீருடன் காத்திருந்த மூஸா மற்றும் நபீசா தம்பதியை காண அவர்களின் மகன் யூனுஸ் சலீம் திரும்பியுள்ளார்.

மலப்புறம் மாவட்டத்தின் பட்டசேரி பகுதியில் குடியிருக்கும் மூஸா மற்றும் நபீசா தம்பதிகளின் மகன் யூனுஸ் சலீம் கடந்த 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென்று வீட்டைவிட்டு மாயமானார்.

தமது 17-வது மாயமான யூனுஸ் பல மாநிலங்கள் பயணப்பட்டு இறுதியில் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில் சென்று சேர்ந்துள்ளார்.

அங்கேயே பிழைப்புக்காக பழங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். தொடர்ந்து அங்கேயே திருமணவும் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூனுஸின் 9 வயது மகள் திடீரென்று காணாமல் போயுள்ளார்.

யூனுசும் மனைவி சானுவும் கண்ணீருடன் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தங்களின் மகளை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

இறுதியில் சுமார் ஒருமணி நேரம் தேடிய அவர்களுக்கு, சிறுமி தமது தாயாரின் சகோதரி குடியிருப்பில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மகளையும் மீட்டு குடியிருப்புக்கு திரும்பும் வழியில், மனைவி சானு தமது கணவரிடம், அந்த பெற்றோருக்கும் இதே வலி தானே கடந்த 20 ஆண்டுகளாக இருக்கும் என வினவியுள்ளார்.

இந்த வார்த்தை யூனுஸை உலுக்கியுள்ளது. இரவு தூங்க விடாமல் செய்துள்ளது. அடுத்த நாள் காலையில் யூனுஸ் மனைவியிடம் கூறிக்கொண்டு கேரளா திரும்பியுள்ளார்.

ஆண்டுகளுக்கு பிறகு மகனை நேரில் பார்த்த மூஸா தம்பதிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது இச்சம்பவம்.

மட்டுமின்றி, தமது மருமகளையும் பேரப்பிள்லைகளையும் நேரில் பார்க்கும் ஆசையையும் அவர்கள் தற்போது தமது மகனிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.