ரீ என்ட்ரி கொடுத்த மும்தாஜ்.! ரசிகர்களை உருகவைக்கும் ஹாட்லுக் புகைப்படம்

மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். அதன்பிறகு குஷி படத்தில் விஜயுடன் ஒரு கவர்ச்சியான பாடலில் நடனமாடியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மும்தாஜ். அதன்பின்னர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்து இருந்தார்.

நடிகை மும்தாஜ் பிறகு சில படங்களில் கவர்ச்சி பாடலுக்கும், பல படங்களில் கௌரவமான தோற்றத்திலும் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்று பல மொழிகளிலும் நடித்து உச்சத்தை எட்டி இருக்கின்றார்.

அதன் பின்னரும் உடல் எடையை அதிகரித்த காரணத்தால், பட வாய்ப்புகள் வெகுவாக குறையத் துவங்கியது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்ட தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பிறகு அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டிருப்பார்.

தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகின்றது. உடல் எடை குறைந்தாலும், வயதானாலும் இன்னமும் இளமையுடன் காட்சி அளிக்கின்றார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.