கடந்த ஆண்டு (2018) வெளி வந்த படம் ‘நாகேஷ் திரையரங்கம்’ இந்த படத்தில் தான் நடிகை மசூம் ஷங்கர் அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருந்தார். இதைதொடர்ந்து இந்த ஆண்டில் வெளியான ’90 ml’ படத்தில் மசூம் ஷங்கரும் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ஹீரோயினாக ஓவியா நடித்திருந்தார். இப்படத்தை அனிதா உதீப் இயக்கியிருந்தார். இந்த நிலையில், மசூம் ஷங்கர் நடித்து கொண்டிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ‘டெடி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சயிஷா டூயட் ஆடி, பாடி வருகிறார். இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மசூம் ஷங்கர் நடித்திருப்பதாக அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், மசூம் ஷங்கர் ‘டெடி’யில் இடம்பெறும் காட்சிகளுக்கான ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாம்.
Thanks so much bringing so much confidence in me sir, I’m completely overwhelmed to be given such opportunity being a part of #Teddy ?
words might get short to comprehend my experience working with the team & @arya_offl sir @actorkaruna sir ?? @ShaktiRajan you rock sir!!? https://t.co/QJdUaKoobN
— Masoom Shankar (@masoom_shankar) November 27, 2019