அபிராமிக்கு அட்வைஸ் கொடுத்த தல அஜித்

தல அஜித் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர் என்பதில் சந்தேகமே வேண்டாம். நடிப்பிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, சிறந்து விளங்குபவர்.  இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.

இந்த ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது, இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அபிராமையை யாராலும் மறக்க முடியாது.

மேலும், இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததன் மூலம் பலரும் தெரிந்திருக்கும், தற்போது ஒரு பேட்டியில் அவர் அஜித் குறித்து பேசினார்.

அப்போது ‘ஒருநாள் பர்ஸ்ட் லுக் ரிலிஸானதும் அஜித் சார் என்னை அழைத்து, எப்படி இருக்கு தற்போது மனநிலை என்று கேட்டார்.

நான் சார் பாலோவர்ஸ் எல்லாம் டபுள் ஆகியிருக்காங்க, எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று சொல்ல, உடனே அஜித் சார், அபி கீழ இறங்கி வாங்க என்று கிண்டலடித்துவிட்டு, எல்லாமே ஒருநாள் மாறும், சினிமா ஒருநாளில் அனைத்தையும் மாற்றும்’ என்று கூறியிருக்கிறார்.