பேய் என கூறி இளைஞர் செய்த காரியம்.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேய் துரத்துவது போல கனவு கண்டு ஓடி வந்து கிணற்றுக்குள் விழுந்ததாக கூறிய இளைஞரை தீயணைப்பு துறையினர் மீட்டு இருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் அயனிவிளை நாகதேவி கோவிலுக்கு வந்த அர்ச்சகர் ஒருவர் கிணற்றுக்குள் சத்தம் கேட்டதாக தோன்ற உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளார். இரும்பு வலை கதவு போட்டு மூடப்பட்ட குறுகிய விட்டம் கொண்ட அந்த கிணற்றுக்குள் இளைஞர் ஒருவர் தன்னை காப்பாற்றுமாறு அலறி துடித்து இருக்கின்றார்.

மிகவும் குறுகிய விட்டம் கொண்ட அந்தக் கிணற்றுக்குள் சொற்ப அளவில்தான் தண்ணீர் இருந்துள்ளது. அதன் பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வலையை கட்டி அந்த இளைஞரை மேலே தூக்கி இருக்கின்றனர். அப்போது விசாரணையில் அந்த இளைஞர் பேய் துரத்துவது போல கனவு கண்டு உள்ளே வந்து விழுந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த பகுதியில் நீண்ட காலமாகவே கோவில் கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்துள்ளது. எனவே, இளைஞர் கனவு என்று கூறுவது உண்மைதானா அல்லது வேறு சிலருடன் புதையல் தேடி வந்து கிணற்றுக்குள் சிக்கிவிட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.