நெய் முறுக்கு பதமாக செய்வது எப்படி.?

தேவையான பொருட்கள் :

பச்சரிசி மாவு – 2 கப்
கடலை மாவு – 1 கப்
ஏலக்காய் தூள் – 3 சிட்டிகை
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 6 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை : 

பச்சரிசியை ஊற வைத்து நீரை வடித்து இடித்து வைத்துக் கொள்ளவும். இடித்த மாவுடன் கடலை மாவு, உப்பு, வெண்ணெய், நெய், ஏலக்காய் தூள் தேவையான தண்ணீர் சேர்த்து பிசையவும்.

பின் முறுக்கு குழாயில் முள் முறுக்கு அச்சினை போட்டு அதில் மாவினை போடவும். பின் கடாயில் எண்ணெய் மற்றும் வாசனைக்கு நெய்யும் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும், மாவைப் போட்டு பிழிந்து பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான சூடான பச்சரிசி நெய் முறுக்கு தயார்.