மத்திய ஆளுநர் பதவியேற்பர் யார்?

இன்றையதினம் இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்ததோடு மைத்ரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி காலம் ரத்து செய்யப்படுகின்றது.

அத்துடன் அவரினால் நியமிக்கப்பட்ட மத்தியமாகாண ஆளுநர் பதவியும் நாளை முதல் வெற்றிடமாகுகின்றது.

இந்த அந்த ஆளுநர் பதவிக்காக இதுவரை கண்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரபலங்க நால்வருக்கிடையில் போர் இடம்பெறுள்ளது.

குறித்த போரானது மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், டிக்கிரி கொபேகடுவ, வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏகநாயக்க, மஹிந்த அபேகோன் மற்றும் எஸ்.பி திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் தனக்கு இந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்கனவே தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், பிரபலமான தேரர்கள் மற்றும் சில தரப்புகள் மூலம் மஹிந்த அபேகோன் இந்த கோரிக்கையை ஏற்கனவே கோட்டபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஒன்பது மாகாணங்களுக்கு உரிய புதிய ஆளுநர்களை நியமிப்பது புதிய ஜனாதிபதியின் முதல் கடமைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.