முதலமைச்சருடன் நடிகை ஸ்ரீபிரியங்கா திடீர் சந்திப்பு.! ஏன் தெரியுமா?

ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட, லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள படத்தின் பெயர் “மிக மிக அவசரம்”. இந்த படத்தில் நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது.

காவல்துறையில் பெண் காவலர்கள் சந்திக்கும் சிரமங்களை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். சமுதாயத்தில் பெண்கள் படும் சிரமங்களை அப்படியே நமக்கு வெளி காட்டிய நடிகை நடிகை ஸ்ரீபிரியங்காவின்  நடிப்பையும் பலரும் பாராட்டினார்கள்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்த படத்தில் நடித்த நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்ததாக நேரில் அழைத்துப் பாராட்டினார்

இதனைத்தொடர்ந்து, இந்த படத்தை பார்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மிக மிக அவசரம் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, நடிகை ஸ்ரீபிரியங்காவுக்கு சால்வை அணிவித்து நாராயணசாமி பாராட்டினார்.