அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது நீதியல்ல கொந்தளிக்கும் சீமான்.!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.

நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின்படி, இஸ்லாமிய வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும்,  சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த மூன்று மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டு என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து  கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சயின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது,  பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது ஏன்? என்றும் இந்த தீர்ப்பு பெருத்த ஏமாற்றம் என தெரிவித்த அவர் பாபர் மசூதி இடிப்பென்பது இசுலாமிய இறையியலுக்கு மட்டுமல்லாது, இந்தியாவின் இறையாண்மைக்கும் எதிரானது என்றார்.

மேலும், அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டது தீர்ப்புதானே ஒழிய, நீதியல்ல என தெரிவித்தார்.