பிகில் ஒரு வார சென்னை வசூல்! கைதியை விட இவ்வளவு அதிகமா?

பிகில் படம் தான் தமிழ்நாட்டில் மிக அதிக திரையரங்குகளில் வெளியானது. தற்போது ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக படம் வசூலித்துள்ளது.

சென்னையில் மட்டும் பிகில் படம் 7வது நாளில் 53 லட்சம் ருபாய் வசூலித்துள்ளது. இதோடு சேர்த்து ஒரு வாரத்தில் பிகில் 8.93 கோடி ருபாய் வசூலித்துள்ளது.

கைதி படம் சென்னையில் 7வது நாளில் 17 லட்சம் ருபாய் வசூலித்துள்ளது. இந்த படத்தின் ஒரு வார வசூல் 2.14 கோடி ருபாய் மட்டுமே.

கைதி வசூலோடு ஒப்பிட்டால் பிகில் நான்கு மடங்கு வசூல் பாக்ஸ் ஆபிசில் குவித்துள்ளது என கூறலாம்.