உலகநாடுகளால் இலங்கைக்கு பாராட்டு!

பல்வேறுசவால்களுக்கு மத்தியிலும் இலங்கை ஜனநாயகம்மிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பாகஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளன.

இலங்கைவந்துள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஸ்டெப் புளக் இன்றுமுற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது,இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள்தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் வரும் ஜனாதிபதி தேர்தலின்போதுகட்சி சார்பின்றி தான் செயற்படப்போவதாக ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்ததேர்தல் அமைதியான, ஜனநாயகம் மிக்க, ஊழல் – மோசடியற்றதேர்தலாக அமைவதற்கு தன்னால் உத்தரவாதமளிக்க முடியுமெனவும்அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்பக்கச்சார்பற்ற சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குஅர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை,ஏப்ரல்-21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தனது ஆழ்ந்த அனுதாபத்தைதெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின் போதுசர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாகமேலும் தெரிவிகபப்ட்டுள்ளது.