1960ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அரிய புகைப்படம்

கடந்த 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்துவைக்கபப்ட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது கடந்த 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான்படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டது

அன்றே பலாலி விமான நிலையம் என எழுதப்படாது யாழ்ப்பாணம் விமான நிலையம் என்றே பெயர் எழுதப்பட்டுள்ளது.

எனினும் பிற்காலத்தில் பலாலி விமான நிலையம் என அழைக்கும் வழக்கமே பல காலமாக நிலவி வந்தது.

இந்நிலையில் பலாலி விமான நிலையமானது மீண்டும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பிரகடப்படுத்தப்பட்டு கடந்த 17 ஆம் திகதி பெயர்ப்பலகையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திரை நீக்கம் செய்துவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.