பெண்களின் உடலை பராமரிக்க பொதுவான ஆரோக்கிய குறிப்புக்கள்..!

இன்றுள்ள காலகட்ட நிலையில் பெண்கள் தங்களின் உடல் நலத்தை பாதுகாப்பது அவசியமான ஒன்றாகும். அந்த வகையில்., தினமும் பெண்கள் கட்டாயம் செய்ய வேண்டிய பொது நலன்கள் குறித்து இனி காண்போம்.

தினமும் ஒரு கப் பால் குடித்தால், எலும்புகள் வலுப்பெறும். எலும்புகளுக்கு தேவையான கால்சிய சத்தும் அதிகரிக்கும்.

எலும்புகளின் உறுதிக்கு கால்சியத்தை காட்டிலும் புரொட்டீன்ஸ் மிக முக்கியமான ஒன்றாகும். புரொட்டீன்ஸ் புடவை என்ற பட்சத்தில்., அதில் இருக்கும் டிசைன்ஸ் கால்சியம் ஆகும். புரொட்டீன் சத்தானது பருப்பு வகை உணவுகள்., சோயா., காளான்., முட்டை., இறைச்சி போன்றவற்றில் அதிகமாக இருக்கும்.

பொதுவாக எலும்புகள் 25 வயது வரை தனது பலத்தை பெறும். இதற்கு பின்னர் மெல்ல மெல்ல வலுவிழக்க துவங்கும். குழந்தைப் பருவத்தில் சுமார் 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் மட்டுமே எலும்புகளை உறுதிப்படுத்துகிறது.

மருதாணியின் இலைகளை எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்பு மற்றும் கால் எரிச்சலுக்கும் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டைகோஸில் அதிகளவில் ஈஸ்ட்ரோஜன் உள்ளதால்., இதன் மூலமாக மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும்… கோதுமை வகை உணவை எடுக்கும் போது., முட்டைகோசுடன் சேர்த்து எடுத்து கொள்வது நலம்.  இதுமட்டுமல்லாது பல பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு ஆப்பிள் சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் சமயத்தில் கார்ன் பிளாக்ஸ் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சமயத்தில் மனஅழுத்தம்., பயம் மற்றும் பதற்றம் போன்றவற்றை குறைக்க இயலும்..