நாம் வீணாக்கும் உணவுக்கூட… சிலருக்கு கிடைப்பதில்லை… சிந்திப்பீர்!!

உலக உணவு தினம்:

உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1979ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.

பசியால் யாரும் வாடக்கூடாது, அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலக மயக்கவியல் தினம்:

1847ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி முதன்முறையாக ஈதர் பயன்படுத்தி அறுவை சிகிச்சை நடைபெற்றது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக மயக்கவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள்:

1905ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காளப் பிரிவு இடம்பெற்றது.

1974ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி கர்நாடக இசைக்கலைஞர் செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்தார்.

1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் மறைந்தார்.