தமிழத்தில் 3000 பேருக்கு டெங்கு காய்ச்சல்..!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் டெங்கு காய்ச்சல் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தடுக்கும் முறைகள் :

இந்த ஏடீஸ் கொசுக்களை ஒழித்தாலோ அல்லது கட்டுப்படுத்தினாலோ டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டாலே, டெங்கு காய்ச்சலை தவிர்க்க முடியும்.

மண் சட்டி ஒன்றில், தீ உண்டாக்கி அதில் வேப்பிலை போட்டு, அதன்மேல் மஞ்சள் தூள் தூவினால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் கொசு மட்டுமின்றி மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரக்கூடிய அனைத்துப் பூச்சிகளையும் விரட்டும். குளிர்காலத்தில் நமக்கு வரும் மூச்சுப்பாதை கோளாறை இந்தப் புகை சரி செய்யும். சுற்றுச்சூழலுக்கும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையை காட்டலாம். இதனால் ஒரு கொசுக்கூட வீட்டில் இருக்காது. இந்த நார்களின் புகையால் உடலுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

மருத்துவம் :

டெங்கு காய்ச்சலை ஒழிக்கக்கூடிய அரிய மூலிகை தாவரமான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு ஆகியவை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

மருத்துவரை பரிந்துரை செய்யாமல் நீங்களாகவே மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும், உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லையென்றால் உயிரிழப்பும் ஏற்படலாம்.

பொதுமக்களின் பங்கு :

வீட்டை சுற்றி தேங்கியிருக்கும் தண்ணீரில்தான் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் இன விருத்தி செய்கின்றன. எனவே, வீட்டை சுற்றி இருக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.

உங்கள் வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கிடக்கும் பயன்படுத்தாத பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த வாளி, டயர்கள் ஆகியவற்றை அகற்ற வேண்டும்.

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை பிளீச்சிங் பவுடர் போட்டு நன்றாக தேய்த்துக் கழுவி, கொசு புகாதவாறு கொசு வலை போன்ற கொசுத்தடுப்பு சாதனங்களைப் பயன்படுத்தி மூடி வைக்கவேண்டும்.