நடிகை பிரியங்கா சோப்ரா; இப்படி ஒரு பழக்கமா?

உலகம் முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் துவங்கி பாலிவுட்டில் புகழ் பெற்று தற்போது ஹாலிவுட் வரை நடித்து முடித்துவிட்டார்.

அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டர். இதனால் அவரது புகழ் இன்னும் பல மடங்கு சினிமாவில் அதிகரித்துவிட்டது.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டர் அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இன்னும்  உங்களிடம் இருக்கும் மிடில் க்ளாஸ் பழக்கம் என்ன? என கேட்டார். அதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா எல்லா உணவுகளுடன் ஊறுகாய் சாப்பிடுவது தான். நான் சாண்ட்விச் சாப்பிட்டால் கூட அதனுடன் ஊருகாய் சாப்பிடுவேன் என தெரிவித்தார்.

மேலும், தீபாவளி போன்ற விழா காலங்களில் ஆன்லைனில் தள்ளுபடியில் பொருட்கள் வாங்குவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.  பணம் சேமிப்பது சந்தோசமான விஷயம் தான் உலகில் உள்ள எல்லோரும் அப்படித்தானே என்றார்.