பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வீட்டில் பங்கேற்ற போட்டியாளர்கள் மத்தியில் மிகவும் விமர்சிக்கப்பட்டவர் நடிகை வனிதா. பிக்பாஸ் வீட்டில் மட்டுமல்ல தமிழகமே விமர்சிக்கப்பட்ட ஒருவராக திகழ்ந்தவர் இவர்.
பிக்பாஸ் வீட்டில் பல்வேறு கலவரங்கள் குழப்பங்களை ஏற்படுத்திய புகழ் இவருக்கு உண்டு. அதன் காரணமாக எப்பொழுது இவர் எலிமினேஷன் ஆவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், வனிதா என்ட்ரி கொடுத்த பின்னர் சுவாரசியம் அதிகமானது.அதன் பின்னர்தான் அவருக்கு வத்திக்குச்சி வனிதா என்ற பெயரும் கிடைத்தது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடல் எடை குறைத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வனிதாவா இது என ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
Back in ACTION ? pic.twitter.com/BoM9wV6TqH
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 10, 2019