வரலாற்றில் முதலிடம் பிடித்த நேற்றைய நாள்! புலனாய்வு பிரிவின் முக்கிய தகவல்

காலிமுகத்திடல் மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் சஜித்தின் வெற்றி நிச்சயம் என்கிறார் அமைச்சர் மனோ

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து கொழும்பு, காலிமுகத்திடலில் நேற்று கூடிய மக்கள் கூட்டம் இலங்கை வரலாற்றில் முதலிடம் பெற்றுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

இதனூடாக சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது எனவும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கொலைகார ராஜபக்ச கும்பலுக்குப் பாடம் புகட்டி சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கவே இந்த மக்கள் வெள்ளம் திரண்டது என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் ஒன்று திரண்ட பல இலட்சம் பேர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் மேலும் குறிப்பிடுகையில்…

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பிரச்சார கூட்டம் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சுமார் 3 இலட்சம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அருகில் உள்ள வீதிகள் மூடப்பட்டு இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் பல கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

பாதுகாப்பு புலனாய்வு பிரிவினரால் 3 இலட்சம் பேர் கொழும்பிற்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் முதலாவது பிரச்சார கூட்டம் நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்றது.

கோத்தாபயவின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் சஜித்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களின் எண்ணிக்கையிலும் பாரியளவில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சஜித்திற்கான மக்கள் ஆதரவை கண்டு கோத்தபாய அணி கலக்கம் அடைத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.