கூட்டமைப்பின் ஆதரவை பெற்ற எவருக்கும் இடமில்லை! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ரிஷாத் பதியுதீன் போன்றவர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைத்திருக்கின்ற எவருடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இணங்கிப் போகமுடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேதாசவிற்கு ஆதரவு வழங்க மாட்டமார். அதேபோல், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இன்றி தேசிய ஜனநாயக முன்னணியால் தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ரிஷாத் பதியுதீன் போன்றவர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது.

ஏனெனில், கொள்கை முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டு வைத்திருக்கின்ற எவருடனும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இணங்கிப் போகமுடியாது.

தீவிரவாதத்தை ஆதரித்ததாகக் கூறப்படும் ரிஷாத் பதியுதீன் போன்ற அமைச்சர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிமட்டத்திலிருந்தே குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ரிஷாத் பதியுதீன் போன்றவர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் ஆதரவு அளிக்க முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.