இங்கிலாந்து காற்பந்து அணி வெளியேற்றப்படுமா?

இந்த முறை யூரோ கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இனரீதியான பரிகாசங்கள் இடம்பெறும் படசத்தில், இங்கிலாந்து காற்பந்து அணி மைதானத்தில் இருந்து வெளியேறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இங்கிலாந்து காற்பந்து அணியைச் சேர்ந்த டேமி அப்ரஹாம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து வரும் வெள்ளிக்கிழமை செக் குடியரசையும், திங்கட்கிழமை பல்கேரியாவையும் சந்திக்கவுள்ளது.

இந்த போட்டிகள் பகுதியளவில் மூடிய அரங்கில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் மாதம் போட்டி இரசிகர்கள் மோசமாக இனவாத அடிப்படையில் நடந்துக் கொண்டதை அடுத்தே, இந்த போட்டிகளை பகுதி அளவில் மூடப்பட்ட அரங்கில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில், இரசிகர்கள் இனவாத அடிப்படையில் நடந்துக் கொண்டால், இங்கிலாந்து அணி மைதானத்தில் இருந்து வெளியேறும் என்று டேமி ஆப்ரஹாம் தெரிவித்துள்ளார்.