பிரபல கால்பந்து பெண் வீராங்கனையின் மார்பில் கை வைத்த நபர்-வெளியான புகைப்படம்

மெக்சிகோவில் நடைபெற்ற பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் போது, பெண் வீரரிடம் செல்பி எடுத்த போது ரசிகர் எல்லை மீறி நடந்து கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவருக்கு கால்பந்து போட்டியை பார்க்க வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்தவர் Sofia Huerta. பிரபல கால்பந்து நட்சத்திரமான இவர் Houston Dash கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் மெக்சிகோவில் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டியின் சாம்பியன் ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த சனிக்கிழமை Liga MX Femenil champions Tigres அணியும், American side Houston Dash அணியும் மோதின, நட்பு ரீதியாக நடைபெற்று வரும் இந்த தொடரில், போட்டி முடிந்த பின்பு Houston Dash அணியில் விளையாடிய Sofia Huerta அங்கிருந்த ரசிகர்களிடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அப்போது ஆண் ரசிகர் ஒருவரிடல் செல்பி எடுத்த போது, அந்த நபர் அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு, அந்த பெண்ணின் மார்பில் கையை வைத்துள்ளார், இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்போது இதை பிரச்னையாக்க வேண்டாம் என்று சிரித்த முகத்தோடு புகைப்படம் எடுத்து கொண்ட Sofia Huerta தன்னுடைய அறைக்கு சென்று இதைப் பற்றி நினைத்து, அங்கிருந்த சில வீராங்கனைகளிடம் கூறி வேதனையடைந்துள்ளார்.

அதன் பின் இது குறித்த புகைப்படத்தை பதிவிட்ட கால்பந்தாட்ட நிர்வாகம், ஒரு நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வது தவறு என்று குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அவர் விளையாடும் கிளப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது ஒருவகை தொல்லை தான், அந்த நபர் யார் என்பது தெரிந்தால், எங்கள் அணி விளையாடும் ஆண் மற்றும் பெண் கால்பந்தாட்ட போட்டியை பார்க்க வாழ்நாள் முழுவதும் தடை விதிப்போம் என்று அறிவித்துள்ளது.