ரயில் தாமதமாக வந்தால் ரூ.100 இழப்பீடு..! ஐஆர்சிடிசி அதிரடி..!

இந்திய ரயில்வேஸின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி அமைப்பு, தேஜாஸ் வகையான ரயில்களின் சேவைகளை தொடங்கவுள்ளது. முதலில், டெல்லி – லக்னோ இடையே வரும் 4ஆம் தேதி முதல் இந்த சேவையை  தொடங்கவுள்ளது.

இந்த ரயில்கள் 1 மணிநேரம் தாமதமானால், 100 ரூபாயும், 2 மணிநேரம் தாமதமானால் 250 ருபாயும் இழப்பீடாக வழங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.