பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவர் தர்ஷன்.
அவரின் காதலி எனக் கூறப்படும் சனம்ஷெட்டி அம்புலி, கதம் கதம், சவாரி படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் தர்ஷன் மூலமாக மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். இந்நிலையில் பிக்பாஸ் குறித்து அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நிறைய பதிவு செய்வது உண்டு.
சமீபத்தில் தர்ஷன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததை அடுத்து அவர் பிக்பாஸ் இது அழகு இல்லை என்று பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து சனம்ஷெட்டி திடீர் என்று மருத்துவமனையில் இருப்பது போல ஒரு புகைப்படம் போட்டதும் இல்லாமல் தான் டியூமரால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என பதிவு செய்திருந்தார்.
தற்போது ஆபரேஷனுக்கு பிறகு நலமாக இருப்பதாக ஒரு புகைப்படம் போட்டு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளார்.







