மோடிக்கு மிரட்டல் விடுத்த பெண்ணிற்கு நேர்ந்த கதி.!

கடந்த சில மாதங்களாகவே, பாகிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் பல்வேறு பூசல்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது பாகிஸ்தானியர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக அமைந்தது.

பாகிஸ்தானை சேர்ந்த ரபி பிர்சாடா என்ற பாகிஸ்தான் பெண் பாடகர் ஒருவர், கடந்த ஐந்தாம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், முதலைகள் மற்றும் பாம்புகளை வைத்து வீடியோ செய்து இருக்கின்றார். அவர் வெளியிட்ட வீடியோவில், கூறியிருப்பது என்னவென்றால் நான் காஷ்மீரைச் சேர்ந்த பெண்.

இந்த பரிசுகள் மோடிக்காக தான் என முதலைகள் மற்றும் பாம்புகளை காட்டியுள்ளார். மேலும்,  நீங்கள் காஷ்மீர் மக்களை மிகவும் துன்புறுத்துகிறீர்கள். இதன் காரணமாக தான் நான் இவற்றை தயாராக வைத்து இருக்கின்றேன்.

நீங்கள் நரகத்தில் இறக்க தயாராக இருங்கள். இவர்கள்(பாம்புகள், முதலைகள்) என்னுடைய நண்பர்கள். உங்களுக்கு இவர்கள் விருந்து வைப்பார்கள்.” என அதில் கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதன் பின்னர் பாடல் ஒன்றை பாடுகிறார். இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகியதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப்  பகுதி வனத்துறை, ரபி  சட்ட விரோதமாக தன்னுடைய வீட்டில் வன விலங்குகளை வைத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இது குறித்து கோர்ட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது. இந்த குற்றமானது நிரூபிக்கப்பட்டால், 2 ஆண்டுகள் வரை அவருக்கு சிறை தண்டனை கிடைக்கலாம்.