அருவி படத்தை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான அதிதி பாலன்

அருவி படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தவர் அதிதி பாலன். இவர் அந்த படத்திற்கு பிறகு எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.

அந்த வகையில் நீண்ட நாட்கள் கழித்து தற்போது இவர் முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை, மலையாள சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நிவின்பாலியின் புதிய படமான Padaveetu என்ற படத்தில் அதிதி நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.