வரலாற்றில் இடம்பிடித்த தமிழிசை.!

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றார். நாட்டில் உள்ள மாநில ஆளுநர்களை மிகவும் குறைந்த வயதுடையவராக இவர் இருக்கின்றார்.

கடந்த ஒன்றாம் தேதி ஐந்து மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய ஆளுநர்களை நியமித்ததன் பின்னர் நாட்டில் உள்ள மாநில ஆளுநர்களின் வயது சராசரியாக 73 ஆக இருக்கின்றது. 58 வயதான தமிழிசை பாஜகவின் மாநில தலைவராகவும், தேசிய செயலாளராகவும் இருந்துள்ளார்.

தெலுங்கானா மாநில ஆளுநரின் பதவிக் காலம் முடிந்ததால், அங்கு தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 60 வயதுக்கு கீழான ஆளுநர்களை தமிழிசை மட்டும் தான் இடம் பிடித்திருக்கிறார். மிகக்குறைந்த வயதில் குஜராத் ஆளுநராக இருப்பவருக்கு வயது 60.

ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் இருப்பவர்களுக்கு 70 முதல் 79 வயது தான் இருக்கின்றது. 28 மாநிலங்களில் 60 வயதுக்கு கீழாகவும் இருக்கின்றனர். எனவேதான் மிகக்குறைந்த வயதான ஆளுநர் என்ற இடத்தை பிடித்துள்ளார். மேலும், குறைந்த வயது பெண் ஆளுநர் என்ற பெருமையும், சிறப்பும் தமிழிசைக்கு கிடைக்கின்றது.