கர்ப்ப காலத்தில் தாம்பத்தியம்?என்ன நிகழும்?.!!

இன்றுள்ள காலநிலையில் பல விஷயங்களை நாம் இணையத்தின் மூலமாக அறிந்து வரும் நிலையில்., கர்ப்பிணி பெண்கள் எந்த விதமான செயல்முறையை கடை பிடிக்க வேண்டும் என்று நமது பெற்றோர்கள் சொல்லி தரவேண்டிய நிலையில்., பல விதமான சூழ்நிலைகளின் காரணமாக இணையத்தின் மூலமாக அறிய வேண்டிய சூழலில் உள்ளோம்.

அந்த வகையில்., கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சந்தேகங்கள் குறித்தும்., அதற்கான தீர்வுகள் குறித்தும் இனி காண்போம். கர்ப்பிணி பெண்கள் குங்கும பூவை சாப்பிட்டால் குழந்தை வெள்ளை நிறத்துடன் பிறக்கும் என்ற எண்ணமானது இருக்கிறது. குங்கும பூவை பாலில் சேர்த்து குடித்து வந்தால்., கர்ப்பிணி பெண்கள் வாந்தி எடுக்காமல் பாலை அருந்தலாம்.

கர்ப்பிணி பெண்கள் அளவோடு பப்பாளி பழம் மற்றும் அண்ணாச்சி பழத்தை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு கருக்கலைப்பு ஏற்படாது. ஆட்டோவில் பயணம் செய்ய முற்படும் சமயத்தில்., ஆட்டோ ஓட்டுனரிடம் கொஞ்சம் பொறுமையாக செல்லுமாறு கூறினால்., யார் என்று தெரியாத நபர் கூட கர்ப்பிணி பெண்ணின் விருப்பத்தை ஏற்று., ஆட்டோவை பொறுமையாக இயக்குவார்.

மாடிப்படிகளில் ஏறி இறங்கும் சமயத்தில் பொறுமையாக ஏறி இறங்க வேண்டும்., குழந்தைகளின் நிறம் என்பது தாய் மற்றும் தந்தையின் மரபை பொறுத்து அமையும். அதன் காரணமாக குழந்தைகளின் நிறம் மாற்றம் பெறாது. கர்ப்பிணி பெண்கள் தூங்கும் சமயத்தில் எழுந்து திரும்பி உறங்க வேண்டும் என்ற அவசியமில்லை., சுமார் ஆறு மாதங்கள் வரை மல்லாந்து உறங்கலாம். இருந்தாலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கர்ப்பமாக இருக்கும் சமயங்களில் நெடுந்தூர பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கர்ப்பிணி பெண்களுக்கு சில நேரங்களில் மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில்., நெடுந்தூர பயணங்களை மேற்கொள்ளும் சமயத்தில் நல்ல மருத்துவமனை உதவிகள் கிடைக்காமல் சென்றுவிடும். முடிந்தளவு கர்ப்பிணி பெண்கள் நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலகட்டத்தில் தனது துணையுடன் தாம்பத்தியம் மேற்கொள்ளலாமா? என்ற சந்தேகமானது இருக்கும். இந்த சமயத்தில் சுமார் கருவுற்ற மூன்று மாதங்களுக்கு பின்னர் பாதுகாப்பான மற்றும் பொறுமையான தாம்பத்தியத்தை., துணையின் விருப்பத்துடன் மேற்கொள்வது நல்லது.

கிரகணங்கள் ஏற்படும் சமயத்தில் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் இருப்பது நல்லது. ஏனெனில் கிரகணத்தின் போது வெளியேறும் கதிர்வீச்சுகள் காரணமாக உடல் நலம் மற்றும் குழந்தையின் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே முன்னோர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு பல விதமான கட்டுப்பாடுகளை விதித்தனர். அவர்கள் செய்த மற்றும் சொன்ன ஒவ்வொரு கூற்றுக்கு பின்னரும் பல அறிவியலானது உள்ளது என்பது இன்றுள்ள ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டு உள்ளது.