அண்டவெளியில் மாபெரும் அதிசயம்..!!

அண்டவெளியில் காணப்படும் பிரமாண்ட கருந்துளையின் புகைப்படம் வரலாற்றில் முதல் முறையாக இப்போது வெளியாகியுள்ளது.

இந்த கருந்துளையின் உருவம் என்பது 40 பில்லியன் கிலோமீட்டர் குறுக்கு வட்டதோற்றமுடையது. பூமியின் அளவை விட 3 மில்லியன் அளவுக்கு பிரமாண்டமானது.

மான்ஸ்டர் என விஞ்ஞானிகளால் வியப்புடன் குறிப்பிடப்படுகின்ற இந்த கருந்துளை ஐந்து கோடி ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள எம்-87 என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ளதாம்.

இந்த பகுதியில் ஒளி கூட ஊடுருவ முடியாது. ஒளியை கூட உள்ளிழுத்துக் கொள்ளும் அளவுக்கு ஈர்ப்பு விசை கொண்டது அந்த கருந்துளை.

இந்த கருந்துளை நமது மொத்த சூரிய குடும்பத்தின் அளவை விட மிகப்பெரியது. நமது சூரிய குடும்பத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களின் ஒளியை விடவும் அதிக ஒளி பொருந்தியதாகும்.

ஹார்வார்ட்-ஸ்மித்சோனியான் மையத்தின் பேராசிரயர் ஷெபர்ட் டோலேமேன் தலைமையிலான குழு 8 தொடர்புடைய டெலஸ்கோப்புகளை கொண்டு ஒருங்கிணைந்து இந்த படத்தை எடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.

200 விஞ்ஞானிகளை உள்ளடக்கிய குழு, டெலஸ்கோப்புகளை, எம்87 நட்சத்திர கூட்டத்தை நோக்கி திருப்பி, 10 நாட்களாக கருந்துளையை படம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இதன் விளைவாக, ஒரு தலைமுறைக்கு முன்பாக, இயலாது என கூறப்பட்ட இந்த சாதனையை விஞ்ஞானிகள் நடத்திக் காட்டியுள்ளனர்.

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்பது ஒரு பிரமாண்ட பரப்பளவு. அதில் எந்த ஒரு பொருளும், ஒளி கூட ஊடுருவி செல்ல முடியாது.

பெயர்தான் துளையே தவிர, அவை காலியாக இருப்பதில்லை. அவை ஒரு சிறிய பகுதிக்குள் அடர்த்தியான விஷயங்களை பொதிந்திருக்கிறது.

கருந்துளையின் ஒரு பகுதி “பாயின்ட் ஆப் நோ ரிட்டர்ன்” என்று அழைக்கப்படுகிறது. அங்கு சென்றால் யாருமே திரும்பி வர முடியாது. அதன் ஈர்ப்பு விசைக்குள் சிக்கி விடுவார்கள். ஆனால், ஒரு மனிதன் அந்த பகுதிக்குள் சென்றால் எப்படி உயிரிழப்பார் என்பதை இதுவரை எந்த விஞ்ஞானியாலும் அறுதியிட்டு கூற முடியவில்லை.

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தியேரிப்படி, இடம், காலம் என அனைத்துமே ஒரு கட்டத்தில் கனவை போல அழிந்து போகும். இந்த கருந்துளையும், அனைத்தையும் மாயமாக்கும் வல்லமை கொண்டது என கூறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.