மீனவர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! கடற்கரைக்கு விரைந்த மக்கள்…

காரைதீவில் இன்றையதினம் மீனவர்களுக்கு பல லட்சக்கணக்கான பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன.

இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த நமசிவாயம் என்ற மீனவரொருவருக்கு 10 ஆயிரம் கிலோ கிராம் பாரைக்குட்டி மீன்கள் பிடிபட்டுள்ளன.

அண்மைக்காலமாக 1 கிலோ கிராம் மீன் 350 ரூபாவிற்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் கடலோரத்தில் மீன் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதுடன் ஊருக்குள் மீன் விற்பனை செய்பவர்கள் ஒரு கிலோ கிராம் மீன் 150 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதன் காரணமாக கடற்கரையை நோக்கி பெருமளவான பொதுமக்கள் விரைந்துள்ளதுடன் மீன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வலையில் இருந்து தவறிய மீன்களை மாத்திரம் எடுத்து ஒரு லட்சம் ரூபாவுக்கும் ஒரு பொதுமகன் விற்பனை செய்துள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளதால் அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.