நள்ளிரவில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கவின்?

பிரபல விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து நட்புனா என்னானு தெரியுமா படத்தில் கதாநாயனாக நடித்தார். இப்படம் சில நாட்கள் முன்பு திரைக்கு வந்தது. இப்படம் வெற்றி பெறவில்லை.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளராக சென்றார். கவினும், லாஸ்லியாவும் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் இருந்து வெளியில் சென்றதும் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.

சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடி செய்த வழக்கில் கவினின் தாயாருக்கு, கடந்த வியாழன் அன்று 7 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெளியில் நடுக்கும் நிகழ்வுகளை பிக்பாஸ் போட்டியாளருக்கு தெரிவிக்கக் கூடாது என்ற விதி உள்ளது.

ஆனால் கடந்த இரண்டு சீசன்கள் போல் இல்லாமல், இந்த சீசனில் பிக்பாஸ் பல சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. வனிதா,மீரா, சரவணன் வெளியில் நடந்த சம்பவத்தை அடைப்படையில் பிக்பாஸ் விட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், மதுமிதா கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக பிக்பாஸ் விட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், கவினிடமும் அவரது தாயார் கைது செய்யப்பட்ட தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கவின், உடனடியாக பிக்பாஸ் விட்டியில் இருந்து வெளியேற வேண்டும் எனக் கேட்டு, வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.