பொள்ளாச்சி அருகே மனைவிமீது கொண்ட சந்தேகத்தால், நாடகமாடிய கணவர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல். கூலி வேலை செய்துவரும் இவர், திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் மனைவி கவுசல்யா, 7 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் மனைவி கவுசல்யா காணவில்லை என்று பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய தாலுகா காவல் நிலைய போலீசார் கவுசல்யாவை தீவிரமாக தேடி வந்தனர்.
விசாரணையில் கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கணவர் சக்திவேல் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகத்தால், கடந்த ஜூலை 26-ம் தேதி அவரை கொன்று, சாக்கில் கட்டி கிணற்றில் வீசியதாக சக்திவேல் வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து கவுசல்யாவின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






