அழகான பெண்களை அடைய ஆசையாக அவர்கள் வீட்டுக்கு சென்ற ஆணுக்கு நடந்தது என்ன!!!

தமிழகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைக்காட்டி பெண்களை படுக்கைக்கு அழைத்த நபருக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தான், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்ட நபர், வேலைவாங்கி தருவதாக இளைஞர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார்.

பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக அழைத்து சென்று அழைக்கழித்துவிட்டும் வேலை வேண்டுமென்றால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதித்து கட்டாயப்படுத்தியுள்ளார்.

சிலரை தனது செல்போனில் படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

இவரது தொல்லைக்கு ஆளான பெண் ஒருவர், தனது தோழியிடம் விவரத்தை சொல்ல அந்த பெண்ணுக்கும் மன்மதனாக வலம் வந்த அந்த நபர் செல்போனில் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நபருக்கு சம்மதம் தெரிவிப்பது போல நடித்து அவரை வீட்டிற்கு வரவழைத்தனர் அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள். அழகான பெண்கள் அழைக்கிறார்கள் என ஆசையுடன் வந்த அவரை ஓட ஓட விரட்டி தாக்கினர்,

தகவல் அறிந்த அந்த பகுதி இளைஞர்களும் அவரை அடித்து உதைத்து பொலிசில் ஒப்படைத்தனர்.

ஆனால் பொலிசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யாமல் விட்டு விட்டதாகவும் அவரின் உண்மையான பெயரை கூட விசாரிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.