உலகசாம்பியன் ஆனார் சிந்து! அனல் பறந்த சிந்துவின் ஆட்டம்!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். முதல் இரண்டு வருடங்களில் தோல்வியை தழுவிய பிவி சிந்து வெள்ளிப் பதக்கத்துடன் இந்தியா திரும்பினார்.

இந்த வருடம் மூன்றாவது முறையாக அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் இந்த வருடமாவது அவர் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நாசோமி உடன் மோதிய சிந்து ஜப்பான் வீராங்கனையை தனது அதிரடியான ஆட்டத்தினால் திணறடித்து ஒரு அபாரமான வெற்றியை பெற்றார்.

முதல் செட்டை 21 – 7 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சிந்து அடுத்த செட்டையும் 21 – 7 என்ற கணக்கில் என்ற கணக்கில் பெற்று எதிரணி வீரரை எழவே விடாமல் துவம்சம் செய்து அட்டகாசமான வெற்றியை பதிவு செய்துள்ளார். இது இறுதி ஆட்டம் போல் இல்லாமல் முதல் சுற்று ஆட்டம் போல ஜப்பான் வீராங்கனையை ஊதித்தள்ளினர் சிந்து. உலக சாம்பியன் பட்டத்தை பெற்ற இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் சிந்து.