600 பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய காம கொடூரன்.!

வேலை தேடும் பெண்களை ஆசை வார்த்தை காட்டி நிர்வாணமாக புகைப்படம் அனுப்ப சொல்லி, இணையத்தில் வெளியிடுவேன் என்று பயமுறுத்தி வீடியோ கால் மூலம் ஆடையை கழட்ட சொல்லி அதையும் பதிவு செய்துள்ள சென்னையை சேர்த்த என்ஜினீரை போலீசார் வளைத்து பிடித்துள்ளனர்.

அவனது கைபேசி மற்றும் லேப்டாப்பை சோதனை செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த கம்ப்யூட்டரில் கிட்டத்தட்ட 600க்கும் மேலான இளம்பெண்களின் நிர்வாண வீடீயோக்கள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான நிர்வாண புகைப்படங்கள் இருந்தது. இதுகுறித்து விசாரிக்கும் போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயது திருமணமான பெண் ஒருவர் தனக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி நிர்வாண புகைப்படம் எடுத்ததாக சென்னையை சேர்த்த என்ஜினீயர் மீது புகார் அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து, அந்த நபரை தீவிரமாக தேடி 5 மாதத்திற்கு பிறகு ராஜ் செழியன் என்ற பிரதீப்பை தெலங்கானா போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கிறார். இவரிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் செழியன். இவரது மனைவியும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். இவர் இரவு நேரத்தில் வேளைக்கு செல்வார், இவரது மனைவி பகல் நேரத்தில் பணிக்கு செல்வார். பகலில் பொழுது போகாத காரணத்தால் செழியன் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று போலியாக நடத்தி வந்தார்.

பிரபல நிறுவனத்தில் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலைசெய்ய பெண்கள் தேவை என்று தனது நிறுவனம் மூலம் விளம்பரம் செய்தார். இந்த செய்தியை உண்மை என்று நம்பிய பெண்கள் நாடு முழுவதிலும் இருந்து இவரை தொடர்பு கொண்டுள்ளனர். அனைவரின் போன் நம்பரை பெற்று கொண்ட செழியன் தனது பெயரை பிரதீப் என்று அறிமுகம் படுத்தி நேர்காணல் செய்துள்ளார்.

பின்னர், அவர்களிடம் நிறுவனத்தின் பெண் எச்.ஆர் தங்களிடம் பேசுவார் என்று கூறி, வேலை உறுதியாகக் கிடைக்கும் ஆனால் அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று நம்பிக்கை தரும் விதமாக செழியன் பேசியுள்ளார். இதனை, அந்தப் பெண்களும் உறுதியாக நம்பியுள்ளனர்.

பின்னர் அந்த பெண்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தை காட்டி, கண்டிப்பாக வேலை கிடைக்கும் நல்ல சம்பளம் என்று பேசி மயக்கி அவர்களிடம் இருந்து நிர்வாண புகைப்படங்களை வாங்கியுள்ளார். அவர்களும் இவன் பேச்சில் மயங்கி புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.

அடுத்தகட்டமாக அனுப்பிய புகைப்படங்களை எல்லாம் இணையத்தில் வெளியிடுவேன் என்று பயமுறுத்தி அவர்களை வீடியோ கால் செய்யுமாறு வலியுறுத்தி ஆடைகளை கழட்டுமாறு செய்து அதையும் பதிவு செய்துள்ளார். இதுபோன்று ஒன்றோ இரண்டோ அல்ல… 16 மாநிலங்களை சேர்த்த 600 பெண்களை இப்படி ஏமாற்றியுள்ளார். ஆனால் யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை.

செழியனிடம் சிக்கிய பெண்களில் 60 பேர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே தமிழகத்தை சேர்த்தவர்கள். மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் தமிழக பெண்களை செழியன் பெரும்பாலும் தேர்வு செய்யவில்லை. ஒரு பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது.

கடந்த ஓராண்டாக இந்த மோசடி செயலில் ஈடுபட்டுவந்து தற்போது சிக்கிய செழியனிடம் இருந்து 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். செல்போன்களை தடவியல் சோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார், செழியனிடம் தீவிரமாக விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

கடைசியாக, வாட்ஸ் ஆப் வீடியோ காலில் வருமாறும், ஒருமுறை நேரில் பார்த்துவிடலாம் என பெண் ஹெச்.ஆர் போல கூறியிருக்கிறான். பெண் HR தான் எதிர்முனையில் இருக்கிறார் என நினைத்த, இளம் பெண்களும், நிர்வாணமாக வீடியோ காலில் வந்துள்ளனர். இதனை பிரத்யேக சாப்ட்வேர் மூலம், மொபைல் போனில் வீடியோவாக பிரதீப் பதிவு செய்து வந்திருக்கிறான். சில நாட்கள் கழித்து, அந்த பெண்களை தொடர்பு கொண்ட பிரதீப், தன்னிடம் உங்களது நிர்வாண வீடியோக்கள் இருக்கிறது என சொல்லி, அவர்களை மிரட்டி பணம் பறித்திருக்கிறான்.

இந்த தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கும் சைபராபாத் நகரின், மியாப்பூர் போலீசார், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த 600 பெண்களின் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். இவனிடம் ஹைதாராபாத்தைச் சேர்ந்த 60 இளம்பெண்கள் ஏமாந்துள்ளது தெரிகிறது. போலி இணையதளத்தை நம்பி உங்களின் வாழ்க்கையை இழக்காதீர்கள். உங்களின் உடல் என்பது காட்சி பொருள் அல்ல என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.. இது போன்று இன்னும் எத்துணை கேடுகெட்ட போலி வேலைவாய்ப்பு இணையம் உள்ளது என்பதையும் அறிந்து காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.