மேடையிலேயே சரிந்த விஜயகாந்த்.! அதிர்ச்சியில் தொண்டர்கள்.!

உடல்நலக்குறைவின் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி நிகழ்ச்சிகளிலும், அரசியல் நிகழ்ச்சிகளிலும் பொதுவாக கலந்து கொள்வதில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில் கூட சிறிது நேரம் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கேப்டனை பார்க்க முடியவில்லை என மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

தேமுதிகவினர் கேப்டனின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் விஜயகாந்த் அவரது 67-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இதன் காரணமாக நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரை சந்தித்து அவர் நல உதவிகளை வழங்கினார்.

அப்போது தமிழகத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஓ ஆர் எந்திரம் வழங்கப்படும் என பிரேமலதா அறிவித்தார். இந்த நிகழ்வில் எம்ஜிஆர் பள்ளிக்குழந்தைகள் கலந்துகொண்டனர்.

அப்போது நலத்திட்ட உதவிகளை வழங்க விஜயகாந்த் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து நிற்க அப்போது எழுந்து நிற்கமுடியாமல் விஜயகாந்த் சற்று சரிய உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி நிற்க வைத்தனர். இந்த விஷயம் கூடியிருந்த தேமுதிக தொண்டர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கான வீடியோ:

விஜயகாந்தின் உடல்நிலை விரைவில் குணமாக வேண்டும் என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும் விரும்புவது தெரிந்த விஷயம்தான். இந்த நிகழ்வானது விஜயகாந்திற்கு ஓய்வு எவ்வளவு அவசியம் என்பதை காட்டுகிறது.