பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்த ஐ.நா!!

ஐ.நா.வின் அங்கமான யுனிசெப் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நியமனம் செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்து அவரை நீக்க வேண்டும் என வலியுறுத்தியது. பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளை நடிகை பிரியங்கா சோப்ரா கூறி வருவதாகவும் பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியது.

பாக்கிஸ்தான் தெரிவித்த கருத்து குறித்து பதிலளித்த ஐநா.சபையின் பொதுச்செயலாளரர் அந்தோணியோ குட்டரஸ், ஐநா.சபையின் முகவர்கள் தங்கள் சொந்த ஆளுமையினால் பேசுகிறார்கள் என்றும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து தங்கள் கருத்துகளை அவர்கள் வெளியிடும் உரிமை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாகிஸ்தானின் கோரிக்கையை ஐநா.சபை நிராகரித்து விட்டது.

ஐநா.சபை சார்பில் அவர்கள் கருத்துகளை வெளியிட்டால் அதன் நடுநிலையை மீற வேண்டாம் என பிரியங்கா சோப்ராவை வலியுறுத்துவோம் என ஐநா.பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.