டீலா.? நோ டீலா.! இந்தியாவிற்கு பாகிஸ்தானின் கண்டிஷன்.!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டது. இந்த முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்யும் பட்சத்தில் பாகிஸ்தானும் தங்களுடைய முடிவை பரிசீலிப்போம் என தெரிவித்து இருக்கின்றது.

இந்திய அரசு அதிரடி நடவடிக்கையாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததது. இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுடன் ராஜாங்க ரீதியிலான உறவு மற்றும் வர்த்தகத்தையும் அவசர அவசரமாக துண்டித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே இயங்கும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை நிறுத்த இருப்பதாக கூறியது. மேலும், பாகிஸ்தானில், இனி இந்திய திரைப்படங்கள் எதுவும் திரையிடப்படாது எனவும் தெரிவித்தது. இதன் காரணமாக இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களிடம், “காஷ்மீருக்கு வழங்கப்படட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்த முடிவு ஒருதலைபட்சமான, சட்ட விரோதமான முடிவு. எனவே, தான் இந்த முடிவை இந்தியா மறு பரிசீலனை செய்யும் பட்சத்தில் பாகிஸ்தானும் தங்களுடைய முடிவை பரிசீலிப்போம்.’ என தெரிவித்துள்ளார்.