இன்றைய ராசிபலன் (06/08/2019)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்
    றுக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்-. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள்அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களைமுடிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும்.வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் விமர்
    சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கடகம்

    கடகம்: கம்பீரமாக பேசிசில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சி களாலும், விருந்தினர்க ளின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு  கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்
    தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். இரண்டாம் முயற்சியில் சில காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • துலாம்

    துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்-. உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்:  குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.

  • தனுசு

    தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

  • மகரம்

    மகரம்: பிரச்னைகளின் ஆனிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழிநடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதி காரியின் ஆதரவுக் கிடைக்கும். திட்டம் நிறைவேறும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்

  • மீனம்

    மீனம்:  கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலைசீராகும். புது நட்பு மலரும். வியா பாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில்மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.