ஸ்ரீ தேவியின் கனவு அஜித்தால் நிறை வேறபோகிறது!!

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். தமிழில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தை போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிக்கிறார். இயக்குனர் வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார் இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் நடிகை வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது, அதைத் தொடர்ந்து நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில். இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்தப்படத்தில் போனி கபூர் -வினோத் கூட்டணி மீண்டும் இணைகிறது.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பின் நடிகர் அஜித் நடிக்க உள்ள அடுத்த படத்தில் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. அஜித் படத்தில் தன் மகளை நடிக்க வைக்க வேண்டும் என்பது ஸ்ரீதேவியின் கனவாக இருந்தது. அது தற்போது நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.