‘கயிற்றால் இறுக்கப்பட்டு, கழுத்து’.. ஒரு நொடியில் ‘சிறுமி செய்த’ காரியம்..

லிஃப்டுக்குள் புது வகையான ஆபத்து ஒன்றில் சிக்கிக் கொண்ட சிறுவனை, அதே லிஃப்டுக்குள் ஏறிய சிறுமி தக்க சமயத்தில் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரத்தில், நடந்த இந்த அரிய சம்பவம் முதலில் பதற்றத்தைக் கொடுத்துள்ளது.

அதன்படி ஒரு லிஃப்டினுள் ஏற்கனவே ஒரு சிறுமி இருக்கும் நிலையில், புதிதாக 2 சிறுவர்கள் நுழைகின்றனர். அதில் சிறுவன் ஒருவன் கையில் கயிறு ஒன்றை வைத்துக்கொண்டபடி விளையாடியபடி வருகிறான்.

லிஃப்ட் மூடும்போது, சிறுவனின் கயிறு லிஃப்ட்டின் இடையில் சிக்கிக் கொண்டு, சிறுவனோடு தூக்கி, அவனது கழுத்தை இறுக்குகிறது கயிறு.

இதைக் காணும்போது நமக்கு பதற்றமாக இருந்தாலும், அங்கிருந்த சிறுமி ஒருத்தி, பதறாமல், சிறுவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு, லிஃப்டு பட்டனை கீழ்நோக்கி அழுத்தி, அதன் பிரஷரைக் குறைக்கிறாள்.

உடனே சமயோஜிதமாக சிறுவனின் கயிற்றை அகற்றி, வேகமாக காப்பாற்றுகிறாள். சிறுவர், சிறுமியரை எப்படி தனியாக லிஃப்டுக்குள் அனுமதித்தார்கள் என்றும், அதே சமயத்தில் அறிவுப்பூர்வமாக சிந்தித்து சிறுவனைக் காப்பாற்றியதையும் இணையத்தில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்.