வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்!

வளைகுடா பகுதியில் ஈரான் மற்றுமொரு எண்ணெய்க் கப்பலை தடுத்துவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடொன்றுக்கு சொந்தமான எண்ணெய்க் கப்பலொன்றே இன்று இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும்,எந்த நாட்டுக்கு சொந்தமான கப்பல் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை

இதன்போது,குறித்த கப்பலில் ஏழு மாலுமிகளும், 7 லட்சம் லீட்டர் எண்ணெயும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததை அடுத்து, கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தன.

தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, “கிரேஸ் 1′ என்ற ஈரான் எண்ணெய்க் கப்பலை ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரித்தானியா கடந்த மாதம் 4 ஆம் திகதி சிறைப்பிடித்தது.

இந்த நிலையில், தமது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, அதே பகுதியில் பிரித்தானிய எண்ணெய்க் கப்பலான “ஸ்டெனா இம்பெரோ’வை ஈரான், கடந்த மாதம் 19-ஆம் திகதி சிறைப்பிடித்தது.

இந்த நிலையிலேயே, ஈரான் மற்றுமொரு நாட்டின் எண்ணெய்க் கப்பலொன்றை இன்று சிறைபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.