முகேன் செய்த வெறிச்செயல்.. நடந்தது என்ன? பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் 3ல் இருந்து நடிகை ரேஷ்மா இன்று வெளியில் அனுப்பப்பட்டுள்ளார். அவரை இந்த வாரம் நாமினேட் செய்தது முகேன். “அத்தை நீ செத்த..” என கூறி கிண்டல் செய்து முகேன் ரேஷ்மா பெயரை கூறினார். ஆனால் அதன் பிறகு தான் செய்தது தவறு என கூறி வருத்தப்பட்டார்.

இந்நிலையில் இன்று ரேஷ்மா வெளியேற்றப்பட்டபோது முகேன் கதறி அழுதுவிட்டார். தான் செய்த தவறால் தான் இது நடந்தது என அவர் வருத்தப்பட்டார்.

இந்நிலையில் நாளை வரவுள்ள காட்சிகள் பற்றிய டீசரில் முகேன் தன்னுடைய கையாளேயே கட்டிலை அடித்து உடைக்கிறார். அவர் முன்னால் அபிராமி தான் அமர்ந்திருக்கிறார்.

அவரை இந்த அளவுக்கு கோபப்படுத்திய விஷயம் என்ன என்பது நாளை தான் தெரியவரும்.