சென்னை போக்குவரத்து பணிமனை விபத்தில் இளம்மனைவி ஒருவர் திருமணம் முடிந்த 24 நாட்களில் தன்னுடைய கணவரை இழந்துள்ளார்.
சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில், நேற்று நள்ளிரவு 12.40 மணியளவில் ஊழியர்கள் பணிகளை முடித்து கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து இருந்துள்ளனர்.
அந்த சமயத்தில் சோதனை செய்துகொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுவரின் மீது மோதியுள்ளது.
இந்த தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு அதிகாரிகள், இடர்பாடுகளில் சிக்கி காயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சேகர், பாரதி ஆகிய 2 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் உயிரிழந்த பாரதி 24 நாட்களுக்கு முன்பு தான் நாகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.