யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வுத்துறையின் அலுவலகத்தில் வேலை செய்த கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெநாதகுருக்கள் கிருபாலினி என்ற 35 வயது குடும்பப் பெண் தற்கொலை செய்திருக்கலாம் என சட்டவைத்திய அறிக்கை தெரிவிக்கின்றது.
தான் தப்பிக்க் கூடாது என்பதற்காக தனது கைகளை தானே கட்டி கிணற்றிற்குள் பாய்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைகளை முன்பக்கமாக கட்டி, பின்னர் கால்களின் கீழால் கைகளை பின்பக்கமாக கொண்டு வந்திருக்கலாமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவரது கால்கள் படுக்கை துணியால் கட்டப்பட்டுள்ளது.
எவ்வாறு இ்வ்வாறான மிகச் சந்தேககரமான சட்டவைத்திய அறிக்கை வெளியிடப்பட்டது ஏன்? என அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஒருபோதும் குறித்த பெண்ணோ அல்லது வேறு யாருமோ தனது கைகளைக் கட்டிவிட்டு கால்களையும் கட்டி விட்டு கிணற்றுக்குள் பாய முடியாது என்றும் முதலில் கையைக் கட்டினாரா? அல்லது காலைக் கட்டினாரா?? என்பதை ஆராய்ந்து பார்த்தாலே இந்த வைத்திய அறிக்கை மிகவும் சந்தேகமானது என்பது புலப்படும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் பெரும் பயங்கரமான செயற்பாடு இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.