நடிகர் மாதவன் நடிப்பில் அலைபாயுதே, மின்னலே போன்ற படங்கள் வெளியான காலம் முதலே அவருக்கு அதிக அளவில் ரசிகைகள் உருவாகிவிட்டனர். தற்போது உள்ள தலைமுறைக்கும் அவரை அதிகம் பிடித்துள்ளது என்றும் கூறலாம்.
அதை நிரூபிக்கும் விதத்தில் ஒரு 18 வயது பெண் இன்ஸ்டாகிராமில் “எனக்கு வயது 18 ஆகிறது, உங்களை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்துள்ள மாதவன், “God bless you.. என்னைவிட சிறப்பான ஒருவர் உனக்கு கிடைப்பார்” என குறிப்பிட்டுள்ளார்.