விஜய் சேதுபதி என் படத்தில்! குஷியான இலங்கை கிரிக்கெட் வீரர்!

நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக சினிமாவில் வலம் வருகிறார். அவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிப்பது மட்டுமில்லாமல் பல சமூக விசயங்கள் குறித்து பேசிவருகிறார். டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அண்மையில் அவரின் நடிப்பில் சிந்துபாத் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்தது. அடுத்ததாக அவர் இலங்கை பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

இப்படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கவுள்ளார். என்னை போல விஜய் சேதுபதி நடிப்பது எனக்கு மரியாதையாக இருக்கிறது என முத்தையா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.