ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த, கொடூரன்.!

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி கீழ தாயில்பட்டி பகுதியை சேர்ந்த சூர்யராஜ் (வயது 43) என்பவர் ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகின்றார்.

சூர்யராஜ்க்கு சொந்தமான ஆடுகள் அனைத்தும், தினமும் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வருவது வழக்கம். நேற்றும் இதுபோலவே, ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றுவிட்டு வந்த போது, மாலையில் ஆடுகள் கொட்டகைக்குள் வந்து சேர்ந்தன.

அவ்வாறு ஆடுகள் வந்து சேர்ந்த சிறிது நேரத்தில், ஒவ்வொரு ஆடாக தொடர்ச்சியாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளது. தொடர்ச்சியாக 30 ஆடுகளும் இவ்வாறு இறந்ததும் சூர்யராஜ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். எனவே சந்தேகம் அடைந்த சிவகாசி காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை நடத்தியதில், கீழதாயில் பட்டி அருகே கோட்டையூரை சேர்ந்த பழனிசெல்வம்(50) என்பவர் சொந்தமாக தோட்டம் ஒன்றை வைத்துள்ளார். சூர்யராஜின் ஆடுகள் இவரது தோட்டத்திற்குள் நுழைந்து சேதப்படுத்தியது.

இதனால், தான் ஆத்திரமடைந்த அவர், குருணை மருந்து கலந்து வைத்து அந்த அடுக்களைக்கு உணவை கொடுத்து அவற்றை சாகடித்தது தெரிய வந்துள்ளது. இதன்காரணமாக போலீசார் பழனிசெல்வத்தை கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தின் காரணமாக அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.