மதிமுக பொதுச்செயலர் வைகோ 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் எம்பியாக உள்ளார். எம்பியாக தேர்வு செய்யப்பட்ட வைகோ நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்த போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடிகள் மற்றும் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் வைகோ, பிரதமரை சந்தித்து பேசியிருப்பது அனைவருக்கும் வியப்பாக உள்ளது. இந்த சந்திப்பு பிறகு வைகோ செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசையும் நான் கடுமையாக விமர்சித்து வருபவன். ஆனாலும் அவரை சந்தித்த போது என்னை அன்போடு வரவேற்றார்.
இது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று. மோடி என்னிடம் நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய நபராக இருக்கிறீர்கள், ஆனால் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார். அதற்கு நான் கொண்ட கொள்கையின் அடிப்படையில் இவ்வாறு செயல்படுவதாக தெரிவித்தேன்.
பிரதமர் மோடியிடம் மூன்று விஷயங்களை நான் எடுத்துக் கூறினேன். நில ஆர்ஜித சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பும், ஆந்திராவில் 20 அப்பாவித் தமிழர்களை போலி என்கவுண்டர் மூலம் கொன்றது, நதிகளை இணைப்பதால் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு போன்றவை பற்றி அவரிடம் பேசினேன்.
மேலும், நான் யாழ்ப்பாணம் சென்றது ராஜபக்சே விவகாரம் போன்றவை பற்றியும் பேசினார் இன்னும் சில விஷயங்கள் பற்றி விவாதித்தோம், எல்லாம் பொது இடத்தில் சொல்ல முடியாது. மோடியுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக அமைந்தது.
ஆந்திராவில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது குறித்து நான் கூறியபோது, பிரதமர் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என்று கூறினார் என்றார் வைகோ.






