கோவாவில் கொடூரமாக கொல்லப்பட்ட 15 வயது சிறுமி..

பிரித்தானியாவை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இந்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த ஸ்கர்லீட் கீலிங் (15) என்ற சிறுமி கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவின் கோவாவுக்கு சுற்றுலா வந்தார்.

அந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் திகதி கோவா கடற்கரையில் கீலிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் கீலிங்குக்கு அதிகளவு போதை மருத்துகள் கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் சாம்சன் டிசோசா மற்றும் கார்வலோ எனற இருவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கார்வலோவுக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இல்லை என கூறி அவரை நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில் 11 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி குற்றவாளி சாம்சனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக் அபேசிய வழக்கறிஞர் விக்ரம் வர்மா, நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

இத்தனை ஆண்டு காலம் ஆனாலும் நீதி வென்றுள்ளது என கூறியுள்ளார்.